Indian Railways News => Topic started by greatindian on Jul 10, 2013 - 06:00:22 AM


Title - Puducherry Kanniyakumari weekly express begins on 13th July
Posted by : greatindian on Jul 10, 2013 - 06:00:22 AM

விருதுநகர்–மானா மதுரை இடையே ரெயில் போக்குவரத்தை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15–ம் தேதி முதல் தொடங்க வேண்டுமென மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரியையும் சந்தித்து வலியுறுத்தினர். இருப்பினும் ரெயில் சேவை தொடங்குவது எப்போது? என்பது உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி புதுச்சேரி–கன்னியாகுமரி இடையேயான வாராந்திர ரெயில் வருகிற 13–ந்தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ரஸ்தோகியிடம் கேட்டபோது, ரெயில் போக்குவரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 13–ம் தேதி விருதுநகர்–மானாமதுரை அகல ரெயில் பாதையில் ரெயில் இயக்கப்படும் என்றும் கூறினார். அவரிடம் விருதுநகர்–மானாமதுரை இடையே ரெயில் இயக்கப்படுவது எப்போது? என கேட்டபோது அதுபற்றிய அறிவிப்பு எதுவும் தற்போது இல்லை என தெரிவித்தார்.