Indian Railways News => Topic started by nikhilndls on Apr 10, 2013 - 18:00:33 PM


Title - சித்தேரியில் ரயில் தடம் புரண்டது : மத்திய இணை அமைச்சர் வருகை
Posted by : nikhilndls on Apr 10, 2013 - 18:00:33 PM

அரக்கோணம் அருகே சித்தேரியில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை யஷ்வந்த்புர் விரைவு ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

பீகார் மாநிலம் முஷாபர்புரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்புர் செல்லும் விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது. இந்த விபத்தில் 4 பேர் பலியாயினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. மீட்புப் பணிகளை பார்வையிட இன்று மதியம் மத்திய இணை அமைச்சர் சூரிய பிரகாஷ் ரெட்டி அப்பகுதிக்கு வரவிருக்கிறார்.