Indian Railways News => Topic started by RailXpert on Dec 06, 2012 - 03:12:11 AM


Title - சேலம் வழியாக திருநெல்வேலி, பெங்களூருக்கு சிறப்பு ரெயில் | Daily Thanthi
Posted by : RailXpert on Dec 06, 2012 - 03:12:11 AM

சேலம்

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பவதாவது:–
ரெயில்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அவ்வப்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி, பெங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு(06515) வருகிற 9–ந் தேதி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு ஓசூர், தர்மபுரி வழியாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு 11.15 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து 11.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ஆகிய வழியாக இரவு 7.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கமாக 9–ந் தேதி திருநெல்வேலியில் (06516) இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு மதியம் 1.10 மணிக்கு சென்றடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.