Indian Railways News => Topic started by ConfirmTicket on Dec 02, 2012 - 08:00:18 AM


Title - டிடிஆருடன் பயணிகள் வாக்குவாதம் அடையாள அட்டை கட்டாயம் நடைமுறை அமலுக்கு வந்தது
Posted by : ConfirmTicket on Dec 02, 2012 - 08:00:18 AM

சென்னை, டிச.2:
முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் அனைவரும் அடை யாள அட்டை காட்ட வேண்டும் என்ற புதியமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விவரம் தெரியாமல் ரயில் ஏறியவர்கள் பயணச்சீட்டு பரிசோதகருடன் வாக்குவாதம் செய்தனர்.
ரயிலில் தட்கல், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள், ஏசிப்பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் அனைவரும் அடை யாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் அனைத்து பயணிகளும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை உடன் செலுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி புதியமுறை நேற்று அமலுக்கு வந்தது.
இந்த விவரம் தெரியாத பலர் ரயில்வே அறிவித்திருந்த அடையாள அட்டையை கொண்டு வராமல் இருந்தனர். அதனால் பயணிக்கும், பரிசோதகர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘முதல் சில நாட்கள் கெடுபிடி காட்ட வேண்டாம் என்று பரிசோதகர்களுக்கு தெரிவித்துள் ளோம். அதேநேரத்தில் அட்டையை கொண்டு வராதவர்களிடம் எச்சரிக்கை செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளோம்� என்றனர்.
அதேபோல் பயணிக்கும் போது மட்டும்தான் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டை காட்டவோ, நகல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தட்கல், இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டையில் உள்ள வரிசை எண் முன்பதிவில் குறிப்பிடப்படும். அதே அட்டையின் ஒரிஜனலை பயணத்தின்போது பரிசோத கரிடம் காட்ட வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் ஒரு குடும்பத்தினராக பயணித்தால் அவர்களில் ஒருவரின் ரேஷன்கார்டு அடையாள அட்டையை காட்டினால் போதும், தனி நபர்களாக 2ம் வகுப்பில் பயணிப்பவர்கள் பான் கார்டு, டிரைவிங் லைசென்சு, மத்திய மாநில அரசுகள் வரிசை எண்ணுடன் வழங்கிய அடை யாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றை காட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை, மதுரை, சேலம், நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு நிலையங்களில் இருந்து புறப்பட்டு சென்ற அனைத்து ரயில்களிலும் 2ம் வகுப்பு பயணிகளிடம் பரிசோதகர்கள் அடை யாள அட்டையை கேட்டுப் பெற்று சரிபார்த்தனர்.