| Indian Railways News => | Topic started by railgenie on Aug 03, 2013 - 21:00:03 PM |
Title - பழுது பார்க்கும் மையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் மோதி ரயில் பெட்டி நொறுங்கியது|Express train collision rPosted by : railgenie on Aug 03, 2013 - 21:00:03 PM |
|
|
நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏசி ரயில் பெட்டி மீது நெல்லை எக்ஸ்பிரஸ் வேகமாக மோதியதால் அந்த பெட்டியின் சக்கரங்கள் மற்றும் தண்டவாளம் உடைந்தது.நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில் பெட்டிகளை பழுதுபார்க்கும் மையம் (ஆர்.ஓ.எச் ஷெட்) உள்ளது. இம்மையத்தில் நேற்று காலை ஒரு ஏசி பெட்டியை பழுதுபார்க்கும் பணிகள் நடந்தன. நேற்று காலை சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 8.30 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகள் இறங்கிய பின்னர் ரயிலை பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே ஊழியர்கள் பிட்லைனுக்கு எடுத்து சென்றனர்.இன்ஜின் டிரைவர் வடக்குப் பக்கமாக தச்சநல்லூர் ரயில்வே கேட் வரை ரயிலை முன்னே நகர்த்தி, பின்னர் பிட்லைனுக்கு கொண்டு போக முயன்றார். |