Indian Railways News => Topic started by TrustMe on May 20, 2013 - 04:00:17 AM


Title - புதிதாக அமைக்கப்பட்ட சேலம்-கரூர் அகல ரெயில் பாதையில் ரெயில் விடுவது குறித்து 21-ந் தேதி முடிவாகிறது
Posted by : TrustMe on May 20, 2013 - 04:00:17 AM

ராசிபுரம்,மே,19-

புதிதாக அமைக்கப்பட்ட சேலம்-கரூர் அகல ரெயில் பாதையில் ரெயில் விடுவது குறித்து செவ்வாய்க்கிழமை முடிவாகிறது சேலம்-கரூர் அகல ரெயில் பாதையில் 31-ந் தேதிக்குள் ரெயில் விடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற கே.பி.ராமலிங்கம் எம்.பி., அறிவித்து இருந்தார்.

மேலும் இந்த வழியாக இயக்கப்பட உள்ள சென்னை-பழனி ரெயிலில் புதிதாக ஏ.சி கோச் அமைக்க வேண்டும் என்றும், இந்த ரெயிலில் ராசிபுரத்திற்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் கே.பிராமலிங்கம் தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதமும் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் அவரை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுஜாதா ஜெயராஜ் வருகிற செவ்வாய்க்கிழமை ( 21-ந் தேதி) பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து உள்ளார். இதுகுறித்து கே.பி.ராமலிங்கம் எம்.பி நிருபரிடம் கூறியதாவது:-

வருகிற செவ்வாய்கிழமை 11-30 மணிக்கு சேலம் கோட்ட அலுவலகத்தில் கோட்ட மேலாளர், கமர்சியல் மேலாளர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் ஆலோசனை நடத்த வருமாறு என்னை சேலம் கோட்ட மேலாளர் அழைத்து உள்ளார். இதில் ரெயில்வே சம்பந்தமான எனது கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

நான் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அந்தக் கூட்டத்தில் வலியுறுத்துவேன்.31-ந் தேதிக்குள் சேலம்-கரூர் அகல ரெயில் பாதையில் புதிய ரெயிலை இயக்காவிட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பது உறுதி. வர்த்தக அமைப்புகள், வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் ரெயிலை இயக்கக்கோரி உண்ணாவிரதம் இருப்பதாக கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனேகமாக செவ்வாய்க்கிழமை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் சேலம்-கரூர் இடையே ரெயில் ஓடும் தேதி முடிவாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாலக்காடு- ஈரோடு மின்சார ரெயில் தொடக்க விழாவில் அதிகாரிகள் மற்றும் எம்பி.க்களை கொண்டு தொடக்க விழா நடத்தினார்கள். அதுபோல சேலம்-கரூர் ரெயில் போக்குவரத்து தொடக்க விழாவும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.