Indian Railways News => Topic started by RailXpert on Apr 17, 2013 - 21:00:27 PM


Title - மதுரை ரிசர்வ்லைன் தபால் நிலையம் அருகில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மு.க.அழகிரி இன்று திறக்கிறார்
Posted by : RailXpert on Apr 17, 2013 - 21:00:27 PM

மதுரை, : மதுரை ரிசர்வ் லைன் தபால் நிலையம் அருகில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு சேவை மையத்தை இன்று மு.க.அழகிரி திறந்து வைக்கிறார்.
மதுரை நகரின் வடபகுதி மக்கள் வசதிக் காக ரிசர்வ் லைன் தபால் நிலையம் அருகில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து சேவை வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை 10மணிக்கு நடக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்து முன்பதிவு சேவையை தொடங்கி வைக்கிறார். விழாவில் ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி, தென் மண்டல அஞ்சல்துறை தலைவர் சாருகேசி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மதுரை மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி அறிக்கை: ரயில்வே டிக்கெட் முன்பதிவு சேவை மையம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முயற்சியால் இன்று திறக்கப்படுகிறது. விழாவில் மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல்வீரர்கள், பொது மக்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.