Indian Railways News => Topic started by Mafia on Dec 04, 2012 - 00:00:04 AM


Title - மத்திய ரயில்வே அமைச்சருடன் நேரில் சந்திப்பு
Posted by : Mafia on Dec 04, 2012 - 00:00:04 AM

கோவை:பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே போர்டு சேர்மனை வரும் 5 மற்றும் 6 தேதிகளில், நேரில் சந்தித்து வலியுறுத்த, கோவை ரயில்வே போராட்டக்
குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை ரயில்வே போராட்டக் குழு செயற்குழு கூட்டம் அண்ணாமலை ஓட்டலில் நேற்று நடந்தது.
போராட்டக் குழுவின் தலைவர் எம்.பி. நடராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், காங்., கமிட்டி மாவட்ட செயலாளர் சின்னய்யன், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவஞானம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை மூன்று வாரங்களில் முடித்து தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளதால், தேவைப்பட்டால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வரும் ஜன., மாதம் நடத்தப்
படும். வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் கோவை ரயில்வே போராட்டக்குழு தலைவர் எம்.பி., நடராஜன் தலைமையில், மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே போர்டு சேர்மனை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
கோவை புறக்கணித்து போத்தனூர் வழியாக செல்லும் ஒன்பது ரயில்களை கோவைக்கு திருப்ப ஆவன செய்யவேண்டும். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவைக்கு வரும் ரயில் பாதையை "மெயின் டிரக்ங் லைன்' என ரயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.
கடந்த 2009 இடைக்கால பட்ஜெட்டில் 16507/16508 ஜோத்பூர்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் கோவைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். மயிலாடுதுறை மற்றும் திருவனந்தபுரத்துக்கு இரவு ரயில் இயக்கப்பட வேண்டும். சிறப்பு ரயில்கள் விஷயத்தில் கோவையை புறக்கணிப்பது உடனடியாக கைவிட வேண்டும். பீளமேடு மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நின்று, சென்றால், பிரதான ரயில்வே ஸ்டேஷனில் ஏற்படும் நெரிசலை குறைக்க முடியும்.
கோவை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், விழாக் காலங்களில் மட்டும் இயக்காமல் தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.