Indian Railways News => Topic started by irmafia on Dec 03, 2012 - 03:00:22 AM


Title - TRAINS FROM MNM,MV,TJ,KKDI,LALGUDI TO TPJ WILL BE CANCELLED FOLLOWING WITH 6 AND 7TH PF CONSTRUCTION
Posted by : irmafia on Dec 03, 2012 - 03:00:22 AM

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 6 மற்றும் 7–வது பிளாட்பாரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதையொட்டி தொழில்நுட்ப வேலைகள் பணிக்காக வருகிற 4–ந்தேதி முதல் 11–ந்தேதி வரையும் மயிலாடுதுறை, மானாமதுரை, தஞ்சை, லால்குடி, காரைக்குடி ஆகிய பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:–

பயணிகள் ரெயில் ரத்து

மயிலாடுதுறை–திருச்சி–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16233/ 16234), காரைக்குடி–திருச்சி–காரைக்குடி பயணிகள் ரெயில் (வண்டி எண் 06839/ 06840) ஆகிய வண்டிகள் 4–ந் தேதி முதல் 11–ந்தேதி வரையிலும், தஞ்சாவூர்–திருச்சி–தஞ்சாவூர் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76829/ 76820) வருகிற 7–ந்தேதி முதல் 11–ந்தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல திருச்சி–தஞ்சாவூர்–திருச்சி ரெயில் (வண்டி எண் 76824/ 76827), திருச்சி–லால்குடி (வண்டி எண் 76800) ஆகிய பயணிகள் ரெயில் வருகிற 8–ந்தேதியும், மன்னார்குடி–திருச்சி–மானாமதுரை–திருச்சி–மன்னார்குடி (வண்டி எண் 76805–76807/            76808–76806      ), தஞ்சாவூர்–திருச்சி–தஞ்சாவூர் (வண்டி எண் 76823/ 76822) ஆகிய பயணிகள் ரெயில்கள் வருகிற 11–ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம்–நெல்லை ரெயில்

திருச்சி–மயிலாடுதுறை–திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56823/ 56824) திருச்சி–தஞ்சாவூர் இடையே இருமார்க்கத்திலும், திருச்சி–ராமேஸ்வரம்–திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56829/ 56830) புதுக்கோட்டை– திருச்சி இடையே இருமார்க்கத்திலும் வருகிற 7–ந்தேதி முதல் 11–ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

நாகூர்–திருச்சி ரெயில் (வண்டி 56851) பொன்மலை–ஜங்ஷன் இடையேயும், நெல்லை–மயிலாடுதுறை– நெல்லை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56821/ 56822) மணப்பாறை–மயிலாடுதுறை இடையே இருமார்க்கத்திலும், கடலூர் துறைமுகம்–திருச்சி– கடலூர் துறைமுகம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 56805/ 56806) ஸ்ரீரங்கம்–திருச்சி இடையே இருமார்க்கமும், ஈரோடு–திருச்சி–ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56844/ 56843) மற்றும் பாலக்காடு–திருச்சி–பாலக்காடு ரெயில் (வண்டி எண் 56848/ 56847) திருச்சி–கோட்டை இடையேயும் வருகிற 11–ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

போக்குவரத்தில் மாற்றம்

மேலும் 11–ந்தேதி அன்று திருச்சி–நாகூர் பயணிகள் ரெயில் (வண்டி எண் 56852) மாலை 4.30 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கும், திருச்சி–ஹவுரா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12664) மாலை 4 மணிக்கு பதிலாக 95 நிமிடம் தாமதமாக மாலை 5.35 மணிக்கும், சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16127) மதியம் 1.10 மணிக்கு பதிலாக 4 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கும் புறப்படும், சென்னை–திருச்சி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16853) 60 நிமிடம் தாமதமாக மாலை 5.35 மணிக்கு வந்து சேரும்.

குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16128) 10–ந்தேதி திருச்சியில் இருந்து மதியம் 2.10 மணிக்கு பதிலாக மாலை 4.10 மணிக்கு புறப்படும். 7–ந்தேதி முதல் 11–ந்தேதி வரை திருச்சி–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16854) திருச்சியில் இருந்து காலை 9.35 மணிக்கு பதிலாக காலை 10.05 மணிக்கு புறப்படும்.
மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.