Indian Railways News => Topic started by greatindian on Sep 29, 2013 - 20:59:03 PM


Title - சரக்கு கட்டணம் உயர்வு: திரும்ப பெற முதல்வர் வலியுறுத்தல்
Posted by : greatindian on Sep 29, 2013 - 20:59:03 PM

சென்னை : 'ரயில்வே சரக்கு கட்டண உயர்வை, திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலையேற்றம் காரணமாக, விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் சூழலில், ரயில்வே சரக்கு
கட்டணத்தை, மத்திய அரசுஉயர்த்தி இருப்பது, எரிகிற நெருப்பில், எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைந்து உள்ளது.கடந்த சில ஆண்டு களாக, 'வலுவான விலைக் கொள்கை' என்ற பெயரில், அக்டோபர் முதல் ஜூன் வரையிலான, ஒன்பது மாதங்கள், சுறுசுறுப்பான பருவம்; ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, மூன்று மாதங்கள், சுறுசுறுப்பற்ற பருவம் என, வகைப்படுத்தப்பட்டு உள்ளது.ஒன்பது மாதங்களுக்கு, அதிகப்படியான சரக்கு கட்டணத்தை, மத்திய அரசு விதித்து வருகிறது.சுறுசுறுப்பற்ற பருவ காலத்தில், நிலக்கரிக்கான சரக்கு கட்டணம், 5 சதவீதம்; இதர பொருட்களுக்கான சரக்கு கட்டணம், 7 சதவீதம். சுறுசுறுப்பான பருவத்தில், உணவு தானியம் மற்றும் ரசாயன உரங்களுக்கான சரக்கு கட்டணம், 10 சதவீதம்; இதர பொருட்களுக்கான சரக்கு கட்டணம், 12 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது.

அக்டோபர், 1ம் தேதியில் இருந்து, சுறுசுறுப்பு பருவத்திற்கான, சரக்கு கட்டணத்தை, ரயில்வே நிர்வாகம், 15 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால், அனைத்து பொருட்கள் மீதான, சரக்கு கட்டணமும், 15 சதவீதம் உயரும்.சரக்கு கட்டண உயர்வால், அத்தியாவசியப் பொருட்கள் விலை; தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும், மூலப் பொருட்களான, சிமென்ட், நிலக்கரி, இரும்பு, போன்றவற்றின் விலை உயரும்.எனவே, பொருளாதாரத்தின் தற்போதைய பரிதாபகரமான நிலையை கருத்தில் கொண்டு, பண வீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த, தற்போது உயர்த்தப்பட்டுள்ள சரக்கு கட்டண உயர்வை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.