Indian Railways News => Topic started by puneetmafia on Apr 28, 2013 - 00:00:35 AM


Title - சென்னை ரயிலில் அனாதையாக கிடந்த பிறந்த குழந்தை! Read more about சென்னை ரயிலில் அனாதையாக கிடந்த பிறந்த
Posted by : puneetmafia on Apr 28, 2013 - 00:00:35 AM

சென்னை: சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனாதையாக இருந்த பிறந்த குழந்தையை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

சென்னை எழும்பூரியிலிருந்து புறப்பட்ட தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை அழுதுகொண்டு கிடந்தது. உடனே பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். .

இதையடுத்து கடற்கரை ரெயில் நிலையத்தில் ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு படை காவல்துறை இன்ஸ்பெக்டர் பினை ஆண்டனி, சப்-இன்ஸ் பெக்டர் முத்துப்பாண்டி, ஏட்டு பழனி, ஆகியோர் விரைந்து சென்று அந்த குழந்தையை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

பெண் காவல்துறையினர் மூலம் குழந்தையை சுத்தம் செய்து பாலூட்டி இதர பணிகளை செய்தனர். பின்பு  அந்த குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த குழந்தையை இளம் பெண் ரயிலில் பயணிபோல் வந்து சீட்டில் போட்டுவிட்டு சென்றதாகவும் ரயில் கிளம்பியும் அந்த பெண் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பயணிகள் அனாதையாக கிடந்த குழந்தை குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்ததகவும். கூறப் படுகிறது.

ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் அந்த இளம் பெண் யார்? என்றும் அவர் பதிவாகியுள்ளாரா? என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.