Indian Railways News => Topic started by railgenie on Dec 08, 2012 - 06:00:54 AM


Title - பண்டிகை கால கூட்டத்தை சமாளிக்க கரூர் வழியாக நெல்லைக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்
Posted by : railgenie on Dec 08, 2012 - 06:00:54 AM

கரூர், டிச. 7:
பண்டிகை கால கூட்டத்தை சமாளிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் கரூர் வழியாக நேற்று முதல் இயக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக கரூர் வழியாக சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை தோறும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (எண் 06749) இரவு 10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு கரூருக்கு மறுநாள் காலை 6.18க்கு வந்து, 6.20க்கு புறப்படும். நெல்லைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். சிறப்பு ரயில் வரும் 7, 14. 21, 28ம் தேதிகளிலும், ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது.
இதேபோல் திருநெல்வேலியில் இருந்து வியாழன்தோறும் 7ம் தேதி (இன்று) முதல் இந்த ரயில் (06750) மாலை 4 மணிக்கு புறப்படுகிறது. கரூருக்கு நள்ளிரவு 12.5க்கு வந்து 12.10க்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 9.20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. டிசம்பர் 6, 13, 20, 27 மற்றும் ஜனவரி 3, 10 தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயிலில் முதல் வகுப்பு ஏசி, 2வது வகுப்பு ஏசி தலா ஒரு பெட்டி, தூங்கும் வசதியுள்ள பெட்டிகள் 10, ரிசர்வேஷன் இல்லாத பொது பெட்டி 6, கார்டு வேனுடன் இணைந்த பெண்கள் பெட்டி 2 என 21 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.