| போதையில் தூங்கிய கேட்கீப்பர் 3 ரயில்கள் கடந்த பிறகும் கேட் திறக்காததால் அவதி| by railgenie on 29 June, 2013 - 09:01 AM | ||
|---|---|---|
railgenie | போதையில் தூங்கிய கேட்கீப்பர் 3 ரயில்கள் கடந்த பிறகும் கேட் திறக்காததால் அவதி| on 29 June, 2013 - 09:01 AM | |
விருதுநகர்: ரயில்வே கேட்டை மூன்று ரயில்கள் கடந்து சென்ற பிறகும் திறக்க மறந்து போதையில் கேட் கீப்பர் தூங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு, தந்திமரத்தெரு, வாடியான் தெரு, காமராஜர் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் ரயில் கேட்டுக்கள் உள்ளன. தந்திமரத்தெரு ரயில் கேட்டை நேற்று மதியம் 2.50 மணியளவில் மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் ரயிலுக்காக கேட்கீப்பர் மாரியப்பன் பூட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த கேட் கீப்பர் மாரியப்பன் மட்டையாகி தூங்கி விட்டார். ரயில் கடந்து சென்ற பிறகும் கேட் திறக்காததை கண்ட பொதுமக்கள் கேட் பழுதாகி இருப்பதாக நினைத்து அருகில் உள்ள ராமமூர்த்தி ரோடு கேட் வழியாக சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு குட்ஸ் ரயிலும், மதியம் 3.50 மணிக்கு கோவை -நகர்கோவில் பாசஞ்சர் ரயிலும் சென்றுள்ளன. அதன் பின்னரும் தந்திமரத் தெரு ரயில்வே கேட் திறக்கப்படவில்லை. மணிக்கணக்கில் கேட் பூட்டி இருப்பதை கண்டு கோபம் அடைந்த பொதுமக்கள் கேட்கீப்பர் அறையில் சென்று பார்த்துள்ளனர். மாரியப்பன் போதை மயக்கத்தில் கிடந்துள்ளார்.இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ராமமூர்த்தி ரோடு ரயில்கேட் கீப்பர் கணேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் உத்தரவின் பேரில் கணேசன் தந்திமரத்தெரு ரயில்வே கேட்டை மாலை 4.05 மணிக்கு திறந்தார். போதையில் இருந்த கேட் கீப்பர் மாரியப்பனை ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு மாற்று கீப்பராக வீரமணிகண்டனை அதிகாரிகள் நியமித்தனர். | ||